Homeசெய்திகள்சினிமாகவின் நடிக்கும் கிஸ்... இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரம்...

கவின் நடிக்கும் கிஸ்… இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரம்…

-

சதீஷ் இயக்கத்தில் கவின் நடிக்கும் கிஸ் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சின்னத்திரையில் மெகா தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பின்னர் வெள்ளித்திரைக்கு வந்து ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் கவின். அண்மையில் கவின் நடிப்பில் வௌியான டாடா திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதில் கவினின் நடிப்பு பாராட்டப்பட்டது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் கவின் ஸ்டார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். இப்படத்தை பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்குகிறார். வரும் மே மாதம் 10-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

அடுத்ததாக கவின் நடிக்கும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் கடந்த மே மாதம் தொடங்கியது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை பிரபல நடன இயக்குநர் சதீஷ் இயக்குகிறார். அயோத்தி படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகை ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் மிஷ்கின் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் இப்படத்தை தயாரிக்கிறார். ரோம் காம் கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ