Homeசெய்திகள்சினிமாமணப்பெண் தோழியாக கீர்த்தி சுரேஷ்... புகைப்படங்கள் வைரல்....

மணப்பெண் தோழியாக கீர்த்தி சுரேஷ்… புகைப்படங்கள் வைரல்….

-

- Advertisement -
kadalkanni
தோழியின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தென்னிந்தியாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாணிக் காயிதம், சர்காரு வாரி பட்டா, வாஷி, மாமன்னன் உள்ளிட்ட படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. இதில் சாணிக்காயிதம் படத்தில் கீர்த்தியின் நடிப்பு பாராட்டப்பட்டது. தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் சைரன்.

இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் ரகு தாத்தா படத்தில் நடித்து முடித்துள்ளார். கன்னிவெடி, ரிவால்வர் ரீதா படத்தில் நடித்திருக்கிறார்.
இது தவிர பாலிவுட்டில் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்து வருகிறார். இதன் மூலம் அவர் பாலிவுட் திரையுலகிற்கும் செல்கிறார்.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது தோழியின் திருமண விழாவில் கலக்கலான புடவை அணிந்து பங்கேற்றிருக்கிறார்.
இது தொடர்பான புகைப்படங்களை அவர் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவை டிரெண்டாகி வருகின்றன.

MUST READ