Homeசெய்திகள்சினிமாகீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் 'ரகு தாத்தா'… படப்பிடிப்பு நிறைவு!

கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் ‘ரகு தாத்தா’… படப்பிடிப்பு நிறைவு!

-

- Advertisement -

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

‘கே ஜி எஃப்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட பான் இந்தியா பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தற்போது ரகு தாத்தா என்ற படத்தைத் தயாரித்து வருகின்றனர்.

 

இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.
எம்எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ‘ஃபேமிலி மேன்’ சீரிஸின் எழுத்தாளர் சுமன் குமார் தான் இந்தப் படத்தை இயக்குகிறார்.


கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் மூலம் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் முதன் முதலில் நேரடியாக தமிழில் தயாரிப்பாளராக களம் இறங்கியுள்ளனர்.

தனது மக்களுக்காகவும், தன்னுடைய நிலத்தின் அடையாளத்தை காப்பாற்றுவதற்காகவும் ஒரு பெண் மேற்கொள்ளும் கடினமான பயணத்தை இப்படம் விவரிக்கிறது.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமா நிறைவு பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் அனைவரும் காணப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கீர்த்தி சுரேஷ் இயக்குனர் உடன் கேக் வெட்டி அந்தத் தருணங்களைக் கொண்டாடியுள்ளார்.

MUST READ