- Advertisement -
மலையாளத்தில் வாரிசு நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழில், இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து தமிழில் ரஜினிமுருகன், ரெமோ, தொடரி, என அடுத்தடுத்து கமிட்டாகி நடிக்கத் தொடங்கினார். விஜய்யுடன் பைரவா, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், விக்ரமுடன் சாமி ஸ்கொயர் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தமிழில் அவரது நடிப்பில் இறுதியாக சைரன் திரைப்படம் வௌியாகி வரவேற்பை பெற்றது. தற்போது கீர்த்தி சுரேஷ் பல படங்களில் கமிட்டாகி உள்ளார். ரகு தாத்தா, ரிவால்வர் ரீதா, கன்னிவெடி ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார். இது மட்டுமன்றி இந்த ஆண்டு அவர் பாலிவுட்டிலும் தடம் பதிக்கிறார். தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை அட்லீ தயாரிக்கிறார்.




