Homeசெய்திகள்சினிமா"27 வயதிலே ரஜினி சார் படத்தை இயக்கிய பாக்கியசாலி"... கணவருக்காக குஷ்பூ நெகிழ்ச்சி!

“27 வயதிலே ரஜினி சார் படத்தை இயக்கிய பாக்கியசாலி”… கணவருக்காக குஷ்பூ நெகிழ்ச்சி!

-

27 வயதிலேயே ரஜினி சாரை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு தனது கணவருக்கு கிடைத்ததாக குஷ்பு பதிவு வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் சுந்தர் சி தமிழின் கமர்சியல் இயக்குனர்களில் முக்கியமானவர். அவர் 1995 ஆம் ஆண்டு வெளியான ‘முறை மாமன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதையடுத்து முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். பின்னர் அவருக்கு ரஜினியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘அருணாச்சலம்’ படத்தின்  மூலம் சுந்தர் சியின் சினிமா கேரியர் உச்சத்திற்கு சென்றது.

பின்னர் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த சுந்தர் சி-க்கு 2003 ஆம் ஆண்டில் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து படம் இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்தப் படம் தான் ‘அன்பே சிவம்’.

இந்நிலையில் அருணாச்சலம் திரைப்படம் வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து குஷ்பூ பதிவிட்டுள்ளார்.

“ரஜினி சார் மற்றும் உலக நாயகனை வைத்து படம் இயக்குவது ஒவ்வொரு இயக்குனரின் கனவாக இருக்கும். எனது கணவர் மிகவும் பாக்கியசாலி. அவருக்கு 27 என்ற இளம் வயதிலேயே ரஜினி சாரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அருணாச்சலம் திரைப்படம் வெளியாகி 26 ஆண்டுகள் ஆகிவிட்டன. அருணாச்சலம் திரைப்படம் தான் அவரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை. அதற்காக வாழ்த்திய அனைவருக்கும் நன்றி” என்று குஷ்பு பதிவு வெளியிட்டுள்ளார்.

MUST READ