Homeசெய்திகள்சினிமாசங்கர் பட பாடல் காட்சி சவாலாக இருந்தது... அனுபவம் பகிர்ந்த கியாரா அத்வானி...

சங்கர் பட பாடல் காட்சி சவாலாக இருந்தது… அனுபவம் பகிர்ந்த கியாரா அத்வானி…

-

- Advertisement -
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே சமயம் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படமும் தில் ராஜு தயாரிப்பில் உருவாகி வருகிறது. தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் ராம்சரண் உடன் இணைந்து கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா, அஞ்சலி, சுனில், சமுத்திரக்கனி, ஜெயராம் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எஸ் ஜே சூர்யா படத்தில் வில்லனாக நடித்த வருகிறார்.

அரசியல் கதைகளத்தில் இப்படம் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் ராம்சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரையிட படக்குழுவின் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இத்திரைப்படத்தில் நாயகியாக நடித்திருக்கும் கியாரா அத்வாணி, படத்தின் அனுபவம் குறித்து பேசியிருக்கிறார். அதன்படி, நான் ஆடிய பாடல்களில் இதுதான் சவால் நிறைந்தது. இந்த பாடலுக்கு 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றன. மேலும், பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்தது தான்பெரும் சவாலாக இருந்தது. சில நடன அசைவுகள் மிகவும் கடினமாக இருந்ததால், பல பயிற்சிகள் எடுத்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ