Homeசெய்திகள்சினிமாபிரபல இயக்குனரின் மறைவு… துல்கர் சல்மான் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தள்ளிவைப்பு!

பிரபல இயக்குனரின் மறைவு… துல்கர் சல்மான் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தள்ளிவைப்பு!

-

- Advertisement -

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் கிங் ஆப் கொத்தா படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துல்கர் சல்மான் நடிப்பில் கிங் ஆப் கொத்தா திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குனர் அபிலாஷ் ஜோசி இயக்குகிறார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ரித்திகா சிங், சபீர் கல்லாரக்கல், பிரசன்னா, அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரகுமான் இணைந்து இந்தப் இசை அமைக்கின்றனர்.

கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் இந்த படம் வருகின்ற ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படம் மலையாளத்தில் தயாராகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

கிங் ஆப் கோத்தா படத்தின் ட்ரைலர் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ட்ரைலர் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பிரபல மலையாள இயக்குனராக சித்திக் நேற்று மாரடைப்பால் காலமானார். அவரது இழப்பு மலையாள திரையுலகில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அவரது மறைவு காரணமாக படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சித்திக் தமிழில் எங்கள் அண்ணா, சாதுமிரண்டா, விஜய் நடித்த பிரண்ட்ஸ், காவலன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ