கிஸ் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கவின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கிஸ். இந்த படத்தை நடன இயக்குனர் சதீஷ் இயக்கி இருக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ராகுல் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஜென் மார்ட்டின் இந்த படத்திற்கு இசையமைக்க ஹரிஷ் கண்ணன் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அயோத்தி பட நடிகை ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். மேலும் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டரும், டீசரும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 2025 ஜூலை மாதம் இப்படம் திரைக்கு வரும் என புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடிகர் கவின், வெற்றிமாறனின் தயாரிப்பில் உருவாகும் மாஸ்க் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது தவிர விஷ்ணு எடாவன் இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.