- Advertisement -
ஜீவா மற்றும் அஜ்மல் நடிப்பில் வௌியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற கோ திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளது.

கோலிவுட்டின் கல்ட் இயக்குநர்களில் ஒருவர் கே.வி.ஆனந்த். பல முன்னணி நடிகர்களை வைத்து ஆனந்த், பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதில் முக்கியமான ஒன்று கோ திரைப்படம். கடந்த 2011-ம் ஆண்டு கோ திரைப்படம் வெளியானது. இதில் ஜீவா நாயகனாக நடிக்க, கார்த்திகா, அஜ்மல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அரசியல் அரங்கிற்கு செல்வதிலும், சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டு வருவதிலும், இளையர்களின் பங்கு தொடர்பாக அந்தப் படம் விளக்கியது.



