- Advertisement -
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியிருக்கும் கொட்டுக்காளி திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. நகைச்சுவை நடிகராக கோலிவுட்டுக்கு அறிமுகமாகி, முகம் கூட தெரியாத அளவு ஒரு ஓரத்தில் நடித்துக் கொண்டிருந்த நாயகன், இன்று கோலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருகிறார். இறுதியாக சூரி நடிப்பில் வெளியான திரைப்படம் விடுதலை. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து சூரி அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது சூரி நடித்திருக்கும் திரைப்படம் கொட்டுக்காளி.
