Homeசெய்திகள்சினிமாபாலிவுட்டில் கிளம்பிய புதிய சர்ச்சை... பிரபல நடிகைகள் காட்டம்... 

பாலிவுட்டில் கிளம்பிய புதிய சர்ச்சை… பிரபல நடிகைகள் காட்டம்… 

-

- Advertisement -
 நடிகர், நடிகைகள் படப்பிடிப்புக்கு செல்லும்போது, அதிக எண்ணிக்கையில் உதவியாளர்களை அழைத்துச் செல்வதால், அவர்களுக்கு சம்பளம் கொடுத்து தயாரிப்பாளர்கள் பெரும் இழப்பை சந்திப்பதாக புதிய பிரச்சனை கிளம்பியுள்ளது. பாலிவுட் திரையுலகில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக பிரபல பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் பேசியிருக்கிறார்.
அதில், நடிகர் நடிகைகள் படப்பிடிப்புக்கு வரும்போது, அவர்களுடன் எத்தனை பேர் இருக்க வேண்டும் என ஒரு வரைமுறையை ஏற்படுத்த வேண்டும். அதிகம்பேரை அழைத்து வருவதால், தயாரிப்பாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பிரபல தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சுவும் ஆதரவாக பேசியிருக்கிறார். ஹாலிவுட்டில் நடிகர், நடிகைகள் அவர்களாகவே இருக்கைகளை எடுத்து அமர்கின்றனர். ஆனால், இங்கு ஒரு நடிகைக்கு பலர் உதவியாளர்களாக இருக்கின்றனர். நம்மூரில் ஒரு சிகை அலங்கார நிபுணர் இருந்தால் அவருக்கு ஒரு உதவியாளரும், மேக்கப் கலைஞருக்கு உதவியாளர் என பலர் உள்ளனர். இதற்கு நிபந்தனை வைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ