- Advertisement -
தெலுங்கில் முன்னணி நடிகர் ஒருவரை, பிரபல கோலிவுட் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கேலி செய்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
தெலுங்கில் சுமார் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, இந்தியாவிலேயே அதிக ஹீரோயின்களோடு நடித்த சாதனையாளர் என்ற பெருமைக்கு உரியவர் பாலகிருஷ்ணா. பாலய்யா என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அவர், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான எம்.டி.ராமாராவின் மகன் ஆவார். தனது 14 வயதிலே திரைத்துறைக்குள் நுழைந்த பாலகிருஷ்ணா, இன்று வரை வெற்றி நாயகனாக வலம் வருகிறார்.
‘சாஹசமி ஜீவிதம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பாலகிருஷ்ணா 17 படங்களில் டபுள் ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன், பஞ்ச் வசனங்களால் புகழ் பெற்றவர் பாலகிருஷ்ணா. அவரது திரைப்படங்களும், வசனங்களும் தெலுங்கு ரசிகர்களுக்கு என்றுமே உற்சாகத்தை அளிக்கக்கூடியவை என்றே சொல்லலாம். அவரது திரைப்பட வசனங்களில் பல மீம்ஸ்கள் உருவாகி டிரெண்டாகி இருக்கின்றன. 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் அவர், இன்றும் பல படங்களில் கமிட்டாகி அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.
Never Expected This From KS RaviKumar & it's Totally Unfair. pic.twitter.com/kQihjNpARj
— Saloon Kada Shanmugam (@saloon_kada) March 6, 2024
