- Advertisement -
பிரபல நடிகை கௌதமியிடம் நிலமோசடியில், ஈடுபட்ட பாஜக பிரமுகர் அழகப்பன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாஜகவில் உறுப்பினராக இருந்த நடிகை கௌதமி, தனக்கு சொந்தமான 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அழகப்பன், அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் உறவினர்கள் அபகரித்ததாக புகார் அளித்திருந்தார். இதுகுறித்து, குறித்து சென்னை மத்திய பொருளாதார குற்றப்பிரிவுக் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதன்படி, சிவகங்கை மாவட்டம், கோட்டையூரில் உள்ள அழகப்பன் வீட்டில் விசாரணைக்கு சென்ற காவல்துறையினர், மோசடி செய்யப்பட்ட நிலம் தொடர்பான ஆவணங்கள் எதுவும் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலத்தின் ஆவணங்களைச் சரிபார்க்கும் பணியையும், காரைக்குடி வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியோடு, சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக் காவல்துறையினர் மேற்கொண்டனர்.