spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமறைந்த ஸ்ரீ தேவியை கண் முன் நிறுத்திய மகள்... அம்மா ஆடையை ரி கிரியேட் செய்து...

மறைந்த ஸ்ரீ தேவியை கண் முன் நிறுத்திய மகள்… அம்மா ஆடையை ரி கிரியேட் செய்து அசத்தல்…

-

- Advertisement -

மறைந்த நடிகையும், அம்மாவுமான ஸ்ரீ தேவியின் உடையை ரி கிரியேட் செய்து மகள் குஷி கபூர் நிகழ்ச்சி ஒன்றில் அணிந்து சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், தெலுங்கு என அனைத்து இந்திய மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இந்திய மொழிகள் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் ஒரு சில படங்களில் ஸ்ரீ தேவி நடித்துள்ளார். 80-ஸ் லேடி சூப்பர்ஸ்டார் என சொல்லும் அளவுக்கு புகழ்பெற்று விளங்கிய ஸ்ரீ தேவி 2018-ம் ஆண்டு துபாயில் கணவருடன் இருந்தபோது, மர்மமான முறையில் இறந்தார். இச்சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஸ்ரீதேவியின் இரண்டு மகள்களான – ஜான்வி கபூரும், குஷி கபூரும் தற்போது சினிமாவில் நடிகைகளாக கலக்கி வருகின்றனர். மூத்த மகள் ஜான்வி கபூர் ஏற்கனவே பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். இந்தியில் பல படங்களில் நடித்துள்ள அவர், தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து தேவரா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் தென்னிந்திய சினிமாவுக்கும் அறிமுகமாகிறார். குஷி கபூர் தற்போது தான் The Archies என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆகிறார்.
we-r-hiring

இப்படத்தில் குஷி கபூர் மட்டுமன்றி பல முன்னணி நட்சத்திரங்களின் வாரிசுகளும் சினிமாவில் அறிமுகமாகின்றனர். ஷாருக்கானின் மகள் சுஹானா கானும் இப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகிறார். The Archies படத்தின் பிரீமியர் நேற்று மாலை நடந்த நிலையில் அதில் கலந்துகொள்ள பல்வேறு பிரபலங்களும் வந்திருக்கிறார்கள். ஷாருக்கான், அஜய் தேவ்கன், ஆதித்யா கபூர், கஜோல், குஷி கபூர், சுஹானா கான், ரன்பீர் கபூர் உள்பட பல முன்னணி பாலிவுட் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற குஷி கபூர்,
ஸ்ரீதேவியின் பழைய உடையை அணிந்து தான் வந்திருக்கிறார். அந்த வீடியோவும், புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது.

MUST READ