Homeசெய்திகள்சினிமாலால் சலாம் படத்தின் டீசர் அப்டேட்

லால் சலாம் படத்தின் டீசர் அப்டேட்

-

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு இயக்கியுள்ள திரைப்படம் தான் லால் சலாம். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ரஜினியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து லால் சலாம் டப்பிங் பணிகளை ரஜினி நிறைவு செய்துள்ளார் என்ற அறிவிப்பும் வெளியானது. இந்நிலையில் லால் சலாம் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் டீசர் தற்போது தணிக்கை செய்யப்பட்டுள்ளது. இதனால், விரைவில் லால் சலாம் டீசரைப் படக்குழு வெளியிட உள்ளனர்.

MUST READ