Homeசெய்திகள்சினிமாலால் சலாம் படத்திலிருந்து மேக்கிங் காணொலி ரிலீஸ்

லால் சலாம் படத்திலிருந்து மேக்கிங் காணொலி ரிலீஸ்

-

- Advertisement -
லால் சலாம் படத்தில் இடம்பெற்றுள்ள ஏ புல்ல பாடலை உருவாக்கிய விதம் தொடர்பான மேக்கிங் காணொலியை படக்குழு பகிர்ந்துள்ளது. 

3 திரைப்படத்தின் மூலம் கோலிவுட் திரைக்கு இயக்குநராக அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இதைத் தொடர்ந்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். இதில் கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த், டாப்ஸி ஆகியோர் நடித்திருந்தனர். இதன் பிறகு ஐஸ்வர்யா நீண்ட வருடங்களுக்கு படம் இயக்கவில்லை. தற்போது இடைவெளிக்கு பிறகு அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம்.

we-r-hiring
இப்படத்தில் விஷ்ணு விஷால், விதார்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரஜினியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற வேடத்தில் ரஜினி இதில் நடிக்கிறார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 2 நாட்களுக்கு முன்பாக படத்தின் இசை வெளியீட்டு விழாவும் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில், இப்படத்திலிருந்து வெளியான ஏ புல்ல பாடலின் மேக்கிங் காணொலியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இணையத்தில் இது வைரலாகி வருகிறது.

MUST READ