spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமாதவன் நடிக்கும் 'டெஸ்ட்'.... ரிலீஸ் குறித்த புதிய அப்டேட்!

மாதவன் நடிக்கும் ‘டெஸ்ட்’…. ரிலீஸ் குறித்த புதிய அப்டேட்!

-

- Advertisement -

மாதவன் நடிக்கும் டெஸ்ட் படத்தின் ரிலீஸ் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.மாதவன் நடிக்கும் 'டெஸ்ட்'.... ரிலீஸ் குறித்த புதிய அப்டேட்!

நடிகர் மாதவன் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் அதிர்ஷ்டசாலி போன்ற படங்கள் உருவாகி வருகின்றன. இதற்கிடையில் இவர் சசிகாந்த் இயக்கத்தில் டெஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் மாதவன் உடன் இணைந்து நயன்தாரா, சித்தார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சக்தி ஸ்ரீ கோபாலன் இதற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதே சமயம் ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மாதவன் நடிக்கும் 'டெஸ்ட்'.... ரிலீஸ் குறித்த புதிய அப்டேட்!அதன்படி இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தொடர்ந்து பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்த படம் 2025 ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என புதிய அப்டேட் கிடைத்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ