spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது மண்ணாங்கட்டி, ராக்காயி, டியர் ஸ்டுடென்ட்ஸ் என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இது தவிர டாக்ஸிக் திரைப்படத்தில் யாஷுக்கு அக்காவாகவும் நடித்து வருகிறார் நயன்தாரா. மேலும் இவர், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் அம்மனாக நடித்து வருகிறார். நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஹிப் ஹாப் ஆதி இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து சுந்தர்.சி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அடுத்தது ரெஜினா, யோகி பாபு ஆகியோர் இந்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.

we-r-hiring

இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனை இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் உறுதி செய்துள்ளார்.

MUST READ