ரஜினி மற்றும் நெல்சன் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ஏற்கனவே ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்து புதிய படத்தில் பணியாற்றி வருகிறது. அதன்படி இந்த படமானது ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது. ‘ஜெயிலர் 2’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் கேரளா, கோவா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் ஏகப்பட்ட பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருவதாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தவிர இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து ரஜினி, சுந்தர்.சி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம்.
அடுத்தது மீண்டும் நெல்சன் உடன் இணைந்து பணியாற்ற இருப்பதாகவும் இந்த படம் தான் ரஜினியின் கடைசி படமாக இருக்கும் எனவும், இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து கமல்ஹாசன் நடிக்க உள்ளார் எனவும் சமீபகாலமாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் சுந்தர்.சி – ரஜினி கூட்டணியிலான புதிய படம் தொடர்பான அறிவிப்பை வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. எனவே அதே நாளில் தானும், கமலும் நடிக்கும் படத்தை நெல்சன் தான் இயக்கப்போகிறார் என்பதை அறிவித்துவிடலாம் என்று ரஜினி முடிவு செய்திருந்தாராம்.
ஆனால் நெல்சன், ‘வேண்டாம் சார், ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸுக்கு பிறகு இதனை அறிவித்துக் கொள்ளலாம்’ என்று ரஜினியிடம் கெஞ்சியதாக தற்போதைய தகவல்கள் வெளிவந்துள்ளது. இருப்பினும் ரஜினியை வைத்து நெல்சன் தரமான சம்பவம் செய்திருந்த நிலையில் ரஜினி – கமல் இருவரையும் வைத்து நெல்சன் எந்த மாதிரியான சம்பவம் செய்யப்போகிறார்? என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


