விக்ரம் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்‘ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஸ்டுடியோ ஸ்கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கே ஜி எஃப் இல் நடந்து முடிந்தது. அதன் பின் பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் விக்ரம் பிசியாக இருந்த நிலையில் தற்போது தங்களால் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம், கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும் மையமாகக் கொண்டுஉருவாக்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விக்ரமுக்கு விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு ஓய்வில் இருந்து படப்பிடிப்பிற்கு வந்த விக்ரம் குறித்து பா.ரஞ்சித், நடிகர் விக்ரம் இந்த படத்திற்காக 7 மாதங்கள் உடல் எடையை குறைத்து தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டதாகவும், மேலும் விக்ரம் ஒரு வார படப்பிடிப்பிற்கு பிறகு பா ரஞ்சித்தை தொடர்பு கொண்டு ” நீங்கள் இப்படத்தை இயக்கும் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இப்படத்திற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்கிறேன்” என்று பேசியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

தங்கலான் திரைப்படமானது,19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை விளக்கும் திரைப்படமாக இருக்கும் எனவும் பா ரஞ்சித் தெரிவித்திருக்கிறார்.