Homeசெய்திகள்சினிமாதனுஷுடன் இணையும் மற்றுமொரு பிரபலம்..... 'D51' படத்தின் முக்கிய அறிவிப்பு!

தனுஷுடன் இணையும் மற்றுமொரு பிரபலம்….. ‘D51’ படத்தின் முக்கிய அறிவிப்பு!

-

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார்.இந்த படம் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதே சமயம் தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக தனுஷ் மற்றும் சேகர் கம்முலா கூட்டணியில் D51 படத்தின் அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் இந்த படத்தை இணைந்து தயாரிக்கிறது. இது வித்தியாசமான கதைக்களத்தில் ஹை பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக தெரியவந்தது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் முன்னிட்டு மொழிகளில் படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதைத்தொடர்ந்து இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா இந்த படத்தில் இணைந்துள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நாகார்ஜுனாவின் பிறந்தநாள் தினமான இன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே நாகார்ஜுனா தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தனுஷ் உடன் இணைந்து நாகார்ஜுனா நடிக்க இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

MUST READ