spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜெயிலர் பட காமெடி வேற லெவல்… யோகிபாபு கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

ஜெயிலர் பட காமெடி வேற லெவல்… யோகிபாபு கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

யோகிபாபு, தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இவர் நடித்திருந்த தர்ம பிரபு, மண்டேலா போன்ற திரைப்படங்கள் இவருக்கு பெரிய அளவில் வெற்றியை தந்தது.

அதைத்தொடர்ந்து இவர், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், ஷாருக்கான், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

we-r-hiring

அந்த வகையில் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்‘ படத்தில் யோகி பாபு நடித்துள்ளார். ‘தர்பார்’ படத்திற்கு பிறகு மீண்டும் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட யோகி பாபு, “தர்பார் படத்தில் நானும் ரஜினியும் ஓரளவிற்கு ஒட்டி இருந்தோம். தற்போது ஜெயிலர் படத்தில் ஃபுல்லாகவே ஒட்டி இருக்கிறோம். ஜெயிலர் படத்தின் காமெடி வித்தியாசமாக இருக்கும். அந்த அளவிற்கு ரஜினி தன்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கு சுதந்திரம் கொடுப்பார்” என்று கூறியுள்ளார்.

எனவே இதிலிருந்து ஜெயிலர் படத்தில் ரஜினி – யோகிபாபு காம்போ காமெடி வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ