spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய், வெங்கட் பிரபு கூட்டணியில் 'தளபதி 68'.... ஷூட்டிங் எப்போது?

விஜய், வெங்கட் பிரபு கூட்டணியில் ‘தளபதி 68’…. ஷூட்டிங் எப்போது?

-

- Advertisement -

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தற்போது லியோ படம் உருவாகி வருகிறது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இந்த படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் சென்னை கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் இன்னும் ஒரு சில நாட்களே படப்பிடிப்பு காட்சிகள் இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து விஜயின் 68 வது படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
ஏ ஜி எஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாக இருக்கிறது.
மேலும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் கதாநாயகியாக தமன்னா, கிரித்தி ஷெட்டி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. இருந்தபோதிலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
மேலும் இந்த படம் அரசியல் கதைகளத்தில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் தலைப்பு ‘CSK ‘ என்ற தலைப்பு வைக்க வாய்ப்புள்ளதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

we-r-hiring

இந்நிலையில், ‘தளபதி 68‘ படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் ஈடுபட்டிருந்த
இயக்குனர் வெங்கட் பிரபு, அப்பணிகளை விரைவில் முடித்துவிட்டு வருகின்ற ஆகஸ்ட் மாதம் ‘தளபதி 68’ படப்பிடிப்பினை தொடங்குவார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ