spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதங்கலானுக்குப் பிறகு அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்............ இயக்குனர் யார் தெரியுமா?

தங்கலானுக்குப் பிறகு அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்………… இயக்குனர் யார் தெரியுமா?

-

- Advertisement -

நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கோலார் சுரங்கத்தில் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முழுவதும் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. விரைவில் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் விக்ரம் தங்கலான் படத்திற்காக அடர்ந்த தாடி மற்றும் முடிகளை வளர்த்திருந்தார். தற்போது அதனை கிளீன் ஷேவ் செய்துவிட்டு தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார்.

we-r-hiring

அந்த வகையில் விக்ரம் தனது 62வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனரான மகேஷ் சுப்ரமணியம் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான கோப்ரா படத்திற்கு பிறகு லலித் குமார் விக்ரமின் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. மேலும் இந்த படத்திற்கு லோகேஷ் கனகராஜ் ஸ்கிரிப்ட் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ