- Advertisement -
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இன்று, இளம் இயக்குநர்களுக்கு முன்னோடியாக விளங்கும் டாப் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தின் வெற்றியைத் தொடந்து கார்த்தியை வைத்து கைதி, அடுத்து விஜய்யை வைத்து மாஸ்டர் தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இதில் ஒன்று, இரண்டு என இல்லாமல் ஒட்டுமொத்த திரைப்படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மூன்று படங்களின் வெற்றிக்கு பிறகு லோகி இயக்கிய இறுதி திரைப்படம் லியோ.

இதில் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன் உள்பட நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், ஹாலிவுட்டில் வரும் மார்வல் யுனிவர்ஸ் போல, கோலிவுட்டுக்கும் ஒரு யுனிவர்ஸை கொண்டு வந்த பெருமை லோகேஷ் கனகராஜூக்கு உண்டு. லோகி சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற தலைப்பில் உருவாக்கினார். இதில் கைதி, விக்ரம் மற்றும் லியோ படங்களை இணைக்கும் வகையில் திரைக்கதை அமைந்தது.




