லியோ படத்தின் அடுத்த அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் உடன் இணைந்து திரிஷா, சஞ்சய்தத் ,அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ள இந்த படம் குறித்த அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் நான் ரெடி எனும் பாடல் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
மேலும் நடிகர் சஞ்சய்தின் பிறந்த நாளான நேற்று அவரின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் சஞ்சய் கம்பீரமான தோற்றத்தில் மிரட்டலான பின்னணி இசையுடன் காட்டப்படுகிறார்.
இதை தொடர்ந்து வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி லியோ படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நடிகர் அர்ஜுனின் பிறந்தநாள் தினம் ஆகஸ்ட் 15 தான். அதனால் ஆக்சன் கிங் அர்ஜுனின் கிளிம்ஸ் வெளியாகலாம் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.