spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமுதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த 'லியோ'- வீடியோ வெளியிட்டு நெகிழ்ச்சி

முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த ‘லியோ’- வீடியோ வெளியிட்டு நெகிழ்ச்சி

-

- Advertisement -

முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த ‘லியோ’- வீடியோ வெளியிட்டு நெகிழ்ச்சி

நடிகர் விஜய்யும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்‌-ம் 2வது முறையாக இணைந்து உருவாகி வரும் திரைப்படம் லியோ.

vijay leo kashmir schedule wrap

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் திரைப்படத்தின் பூஜை போடப்பட்டு முதலில் ப்ரோமோ வீடியோ எடுக்கப்பட்டது. இந்த ப்ரோமோவானது பிப்ரவரி மாதம் வெளிவந்து அமோக வரவேற்பை பெற்றது. முதலில் சென்னையில் ஓரிரு நாட்கள் படமாக்கப்பட்டு பிறகு கொடைக்கானலில் சிறிது நாட்கள் படமாக்கப்பட்டது. பின்னர் கடந்த பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து லியோ படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

we-r-hiring

இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து இன்று ஒரு அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. இன்றுடன் லியோ திரைப்படத்தின் காஷ்மீர் பகுதி படபிடிப்பு முடிந்து விட்டதாகவும் இன்றுடன் கிளம்புவதாலும் இது தொடர்பாக வீடியோ 6 மணிக்கு வெளியாகும் என இன்ப அதிர்ச்சியை கொடுத்தது பட நிறுவனம்.

Image

கிட்டத்தட்ட 7 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் தொழிலாளர்கள் -10 டிகிரி அளவில் இரவில் தாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பதையும் லோகேஷ் கனகராஜ் எவ்வளவு அழகாக படமாக்கினார் என்பதையும் விவரித்துள்ளனர். வீடியோவின் இறுதி நிமிடத்தில் லோகேஷ் கனகராஜ் ஆக்சன் என்ன என்பதை சொல்வதை போலவும், விஜய் தோன்றுவது போலவும் காட்சியமைக்கப்பட்டுள்ளது. சவாலான குளிரில் கிட்டத்தட்ட ஐம்பது நாட்களுக்கு மேலாக உழைத்த தொழிலாளர்களை பாராட்டுவதற்காக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

MUST READ