- Advertisement -
தென்னிந்திய சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சினிமாவை தாண்டி அவருக்கு நிஜ வாழ்வில் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. நாள்தோறும் பல்வேறு சிக்கல்களையும், சர்ச்சைகளும் சமாளித்து வருகிறார். பேமிலி மேன் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதையடுத்து பாலிவுட் பக்கம் அவருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. தற்போது சிட்டாடெல் இந்தியா என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

இதனிடையே உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது நடிப்பில் கவனத்தை குறைத்துவிட்டு, சிகிச்சை, சுற்றுலா, உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டி வருகிறார். அண்மையில், நடிகை சமந்தா ஆடையில்லாத புகைப்படத்தை தவறுதலாக பதிவிட்டுள்ளார். இதைக் கண்ட அவர் உடனடியாக அதை நீக்கியும் உள்ளார். இருப்பினும் இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.




