Homeசெய்திகள்சினிமாஜவான் ட்ரைலரை பார்த்து பிரமித்த லோகேஷ் கனகராஜ்!

ஜவான் ட்ரைலரை பார்த்து பிரமித்த லோகேஷ் கனகராஜ்!

-

- Advertisement -

ஜவான் பட பிரிவியூ காட்சிகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார்.

ஜவான் திரைப்படம், பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்குகிறார். தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். விஜய்யை வைத்து ஏற்கனவே மூன்று படங்களை இயக்கிய அட்லீ மீண்டும் விஜயுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் தான் பாலிவுட் பக்கம் திரும்பி பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானை வைத்து படம் இயக்குவதற்கான வாய்ப்பை பெற்றார்.

ஜவான் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் இவர்களுடன் தீபிகா படுகோன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கௌரி கான் இப்படத்தை தயாரிக்கிறார் அனிருத் இதற்கு இசையமைக்கிறார். மேலும் இப்படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரிவ்யூ நேற்று படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. அதில் மிரட்டலான பின்னணி இசை உடன் கூடிய தெறிக்கவிடும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருந்தன. ஷாருக்கான் மொட்டை தலை தோட்டத்தில் செம மாஸாக காணப்பட்டார். விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், நயன்தாராவின் காட்சிகளும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளாக அமைந்திருந்தது.

அட்லீ, ஷாருக்கான், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் ஜவான் படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் வெளியான இந்த முன்னோட்ட வீடியோவை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். மேலும் பல்வேறு தரப்பினர் இடையே இது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இது குறித்து பாராட்டி இருந்தார்.

தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் தனது ட்விட்டர் பக்கத்தில்,”ஜவான் உலகம் மிகவும் பிரமிக்க வைக்கிறது. பாலிவுட்டில் அறிமுகமான அட்லி மற்றும் அனிருத் இருவரும் சிறப்பாக உருவாக்கியுள்ளனர். விஜய் சேதுபதியின் லுக் எப்போதும் போல் பிரமிக்க வைக்கிறது. ஜவான் பட ஒட்டுமொத்த நடிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ