spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசின்ன படங்களை சந்தைப்படுத்துவதில் சிக்கல் - லோகேஷ் வருத்தம்

சின்ன படங்களை சந்தைப்படுத்துவதில் சிக்கல் – லோகேஷ் வருத்தம்

-

- Advertisement -
சின்ன பட்ஜெட் படங்களை சந்தைப்படுத்துவதில் பெரும் சிக்கல் நீடிப்பதாக இயக்குநரும், தயாரிப்பாளருமான லோகேஷ் கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும், பிரம்மாண்ட இயக்குநராகவும் வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தில் தொடங்கிய இவரது திரைப்பயணம் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என வரிசையாக வெற்றி கதைகளாக மாறி உள்ளது. கமல்ஹாசன், விஜய், ரஜினி என முன்னணி நட்சத்திரங்களுடன் பல படங்களை இயக்கி வருகிறார். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் லியோ. விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின்,, அர்ஜூன் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

we-r-hiring
லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இவர் ஜி ஸ்குவேட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனத்தின் முதல் படைப்பாக, ஃபைட் கிளப் என்ற படத்தை தயாரித்து இருக்கிறார். உறியடி பட புகழ் விஜயகுமார் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அப்பாஸ் ரஹ்மத் படத்தை இயக்கி உள்ளார். கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து, படத்தின் டீசர் வெளியானது. அதிரடி ஆக்‌ஷன் நிறைந்ததாக வெளியானது ஃபைட் கிளப் முன்னோட்டம்.

இந்நிலையில் இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ், சின்ன படங்களை சந்தைப் படுத்துவதில் சிக்கல் நீடிப்பதாக கூறினார். மேலும், இளைஞர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து படத்தில் பேசியுள்ளதாகவும், ஒடுக்குமுறையை நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக கதையோடு இணைத்துள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

MUST READ