Homeசெய்திகள்சினிமாலோகேஷ் கனகராஜூக்கு சம்பள பாக்கி... வெடிக்கும் புதிய பூகம்பம்....

லோகேஷ் கனகராஜூக்கு சம்பள பாக்கி… வெடிக்கும் புதிய பூகம்பம்….

-

லியோ படத்தில் இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் கனகராஜூக்கு சம்பளம் முழுமையாக தராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து மெகா ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். ஆரம்பம் முதலே சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி அதில், வெற்றியும் கண்டு வருகிறார். டாப் நடிகர்களை வைத்து சினிமாட்டிக் யுனிவர்ஸ் எனும் திரை உலகத்தை தொடக்கி வைத்த பெருமையும் லோகேஷ் கனகராஜை தான் சேரும் . லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம், உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் அர்ஜூன், த்ரிஷா, சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், மற்றும் திரைப்பட இயக்குநர்கள் மிக்ஷின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.

இத்திரைப்படம் கடந்த 19-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. சுமார் 500 கோடிக்கு மேல் லியோ திரைப்படம் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தகவல் வெளியானது. அண்மையில் இத்திரைப்படம் ஓடிடி தளத்திலும் வௌியிடப்பட்டது.
அடுத்ததாக இவர் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 திரைப்படத்தை இயக்க உள்ளார். இதனிடையே தான் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், லியோ படத்திற்கான ஊதியத்தை முழுமையாக லோகேஷ் கனகராஜுக்கு தயாரிப்பு நிறுவனம் வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. படத்தின் பின்னணி பணிகளின்போதே, லோகேஷ் படத்திலிருந்து விலகியதாகவும் அதன்பின் ரத்னகுமார் தான் படத்தின் வேலைகளை பார்த்துக் கொண்டதாகவும் அப்போதே சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில், தற்போது லோகேஷூக்கு சம்பளம் நிலுவையில் இருப்பதாக வெளியான தகவல் மேலும் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

MUST READ