Homeசெய்திகள்சினிமாமுதலாவதாக நெருங்கிய நண்பரின் படத்தை தயாரிக்கும் லோகேஷ்

முதலாவதாக நெருங்கிய நண்பரின் படத்தை தயாரிக்கும் லோகேஷ்

-

- Advertisement -
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து மெகா ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். ஆரம்பம் முதலே சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி அதில், வெற்றியும் கண்டு வருகிறார். டாப் நடிகர்களை வைத்து சினிமாட்டிக் யுனிவர்ஸ் எனும் திரை உலகத்தை தொடக்கி வைத்த பெருமையும் லோகேஷ் கனகராஜை தான் சேரும் .அடுத்ததாக இவர் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் தான் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்தயாரிப்பு நிறுவனத்திற்கு G SQUAD என பெயர் வைத்துள்ளார். நிறுவனத்தின் லோகோவில் தேளை வைத்து வடிவமைத்துள்ளனர். லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சில் வரும் போதைப் பொருள்களில் முத்திரையாக தேள் சின்னம்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கும். அதை குறிப்பிடும் வகையில் இந்த லோகோ வடிவமைக்கப்பட்டு இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படம் மீதான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவரின் நண்பரும், பிரபல இயக்குநருமான ரத்னகுமார் இயக்கும் புதிய படத்தை லோகேஷ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் லியோ வெளியீட்டுக்கு பிறகு, அடுத்த படத்திற்கான பணியை தொடங்க உள்ளதாகவும், அதனால் சமூக வலைதளங்களில் இருந்து சிறிய இடைவௌி எடுப்பதாகவும் அவர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ