லவ் மேரேஜ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு, கும்கி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். தன்னுடைய முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்தார். இவர் தற்போது தெலுங்கிலும் அறிமுகமாகி அனுஷ்காவுடன் இணைந்து காட்டி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவரது நடிப்பில் லவ் மேரேஜ் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து சுஷ்மிதா பட், ரமேஷ் திலக், மீனாட்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். நடிகர் சத்யராஜ் இந்த படத்தின் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. சண்முகப்பிரியன் இப்படத்தை இயற்றியுள்ளார். இந்த படத்தை ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க ஷான் ரோல்டன் இதற்கு இசையமைத்துள்ளார். மதன் கிறிஸ்டோபர் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், பாடல்களும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது இப்படத்தில் இருந்து ‘பேஜாரா ஆனேன்’ இன்னும் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.

இந்தப் பாடலை குக் வித் கோமாளி சிவாங்கி பாடியுள்ளார். மோகன் ராஜன் இப்பாடல் வரிகளை எழுதியுள்ளார். மேலும் லவ் மேரேஜ் திரைப்படமானது கோடை விடுமுறையில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


