- Advertisement -
மணிகண்டன் நடிப்பில் உருவாகியிருக்கும் லவ்வர் திரைப்படம் தெலுங்கு மொழியில் ட்ரூ லவ்வர் என்ற தலைப்பில் வெளியாகிறது.

தமிழில் ஆண்டிற்கு பல படங்கள் வெளியாகின்றன. பற்பல நடிகர்களும், நடிகைகளும் அறிமுகம் ஆகின்றனர். ஆனால் அவற்றில் வெகு சிலர் மட்டுமே நல்ல திரைக்கதை மூலமும், சிறந்த நடிப்பின் மூலமும் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கின்றனர். இந்தியா பாகிஸ்தான், 8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா ஆகிய திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இருப்பினும் அவரது நடிப்பில் வெளியான சில்லு கருப்பட்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின. அடுத்து பாவ கதைகள், ஏலே, நெற்றிக்கண் ஆகிய படங்களில் நடித்தார்.


ஞானவேல் இயக்கத்தில் அவர் நடித்த ஜெய்பீம் திரைப்படம் தான் அவரை திரையுலகின் உச்சிக்கு கொண்டு சேர்த்தது. அடுத்து அவர் நடித்த குட் நைட் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாவும் படம் வரவேற்பை பெற்றது. தற்போது அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் அவர் நடித்து வருகிறார்.



