spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவடிவேலுவுக்காக அசத்தலா இசையமைக்கும் ஏஆர் ரகுமான்... மாமன்னன் முதல் பாடல் ரிலீஸ் அப்டேட்!

வடிவேலுவுக்காக அசத்தலா இசையமைக்கும் ஏஆர் ரகுமான்… மாமன்னன் முதல் பாடல் ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -

மாமன்னன் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில், பகத் பாசில், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

we-r-hiring

இப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.  இப்படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது

இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் ஏ ஆர் ரகுமான் வடிவேல் உடன் இணைந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு “வைகைப்புயல் வடிவேலு உடன் ஒரு பாடலை பதிவு செய்துள்ளோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

வடிவேலுவின் குரலில் உருவான இப்பாடல் வரும் மே 19ஆம் தேதி வெளியாகும் என்று சோனி மியூசிக் சவுத் நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு வடிவேலு பாடியுள்ளதால் பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மேலும் இந்தப் படத்தில் வடிவேலு இதுவரை காணப்படாத புதிய தோற்றத்தில் காணப்படுகிறார். அவரது கதாபாத்திரம் படத்தில் மிக முக்கியமானதாகவும் இருக்கும் என்பதால் மீண்டும் சினிமாவில் அவருக்கு புதிய கதவைத்திறக்க பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

MUST READ