spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமகேஷ் பாபு ராஜமௌலி கூட்டணியின் புதிய பட அப்டேட்!

மகேஷ் பாபு ராஜமௌலி கூட்டணியின் புதிய பட அப்டேட்!

-

- Advertisement -

இயக்குனர் ராஜமௌலி பாகுபலி 1, பாகுபலி 2 படங்கள் மூலமாக இந்தியாவை திரும்பிப் பார்க்கும் இயக்குனராக உருவெடுத்தார். அடுத்ததாக அவர் இயக்கிய ஆர் ஆர் ஆர் படம் மூலமாக உலக அளவில் கவனம் ஈர்த்தார்.ஆர் ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது.

ராஜமௌலி தன் பாகுபலி 2 மற்றும் ஆர் ஆர் ஆர் படம் மூலமாக ஆயிரம் கோடி வசூல் சாதனை படைத்துள்ளார் இவரது படங்களுக்கு தெலுங்கு மட்டுமின்றி தமிழ், ஹிந்தி ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்தார்கள்.

we-r-hiring

ஆர் ஆர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராஜமௌலி, தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணைய இருப்பதாக தகவல்கள் முன்பே கசிந்தன.தற்போது ராஜமௌலி மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு பற்றி அப்டேட் கிடைத்துள்ளது.

இதன்படி இப்படத்துக்கான பூஜை வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கிறது. இப்படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மகேஷ் பாபு தற்போது அழ வைகுந்தபுரம் திரைப்படத்தை இயக்கிய திருவிக்கிரம் இயக்கத்தில் குண்டூர் காரம் எனும் படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்பு மகேஷ் பாபு ராஜமௌலி படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

MUST READ