Homeசெய்திகள்சினிமாவிஜய், அஜித் போல பெரிய ஹீரோக்களோடு படம் இயக்குவது இலக்கு இல்லை - கார்த்திக் சுப்பராஜ் விஜய், அஜித் போல பெரிய ஹீரோக்களோடு படம் இயக்குவது இலக்கு இல்லை – கார்த்திக் சுப்பராஜ்
- Advertisement -

கோலிவுட் திரையுலகில் இன்று முன்னணி இயக்குநராக, தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி இருப்பவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். பீட்சா படத்தின் மூலம் அவர் திரைக்கு இயக்குநராக அறிமுகமாகினார். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் அவர். திகில் கலந்த காமெடி திரைப்படமாக வெளியான பீட்சா, இயக்குநருக்கு மட்டுமன்றி, விஜய் சேதுபதிக்கும் திருப்பு முனையாக அமைந்தது. இதையடுத்து, ஜிகர்தண்டா படத்தை இயக்கினார். இத்திரைப்படத்திற்காக இரண்டு தேசிய விருதுகள் வழங்கப்பட்டன

ஜிகர்தண்டா திரைப்படம் கார்த்திக் சுப்பராஜ் திரைவாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இதையடுத்து, இறைவி படத்தை இயக்கினார். இதில் பாபி சிம்ஹா, எஸ்ஜே சூர்யா, அஞ்சலி, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்திருந்தனர். இதையடுத்து, பேட்ட திரைப்படத்தை இயக்கினார். ரஜினிகாந்த் நடித்த இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா 2. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து புதிய படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் தொடங்கி இருக்கிறது . இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கார்த்திக் சுப்பராஜ், விஜய் மற்றும் அஜித் போன்ற பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்குவதை ஒரு இலக்காக வைத்துக் கொள்ள கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும், நான் அதை பெரிய பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்றும் கூறியிருக்கிறார்.