Homeசெய்திகள்சினிமாமோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன்... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு...

மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன்… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…

-

- Advertisement -
மோகன்லால் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான மலைக்கோட்டை வாலிபன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

மலையாளத்தில் கொடி கட்டிப் பறக்கும் சூப்பர் ஸ்டார் மோகன்லால். மோலிவுட் ரசிகர்கள் மட்டுமன்றி நடிகர், நடிகைகள் மற்றும் திரையுலகினர் அனைவராலும் லாலேட்டன் என்று அன்புடன் அழைக்கப்படுவார். 80-களில் தொடங்கி இன்று வரை நூற்றுக்கணக்கில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மோகன்லால் இறுதியாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். ரஜினியுடன் இணைந்து அவர் நடித்திருப்பார். அப்படம் வரவேற்பையும் பெற்றது.

we-r-hiring
இதைத் தொடர்ந்து நெரு திரைப்படம் மோகன்லால் நடிப்பில் இறுதியாக வெளியானது. இப்படம் சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வரவேற்பை பெற்றது. இதையடுத்து பிருத்விராஜ் இயக்கத்தில் லூசிபர் இரண்டாம் பாகத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துபாய், லண்டன், கேரளா என அடுத்தடுத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பல படங்களில் மோகன்லால் கமிட்டாகி தொடர்ந்து இடைவெளி இல்லாமல் நடித்து வருகிறார்.

அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் மற்றொரு திரைப்படம் மலைக்கோட்டை வாலிபன். இப்படத்தை ஜல்லிக்கட்டு, சுருளி, அங்கமாலி டைரிஸ் பட இயக்குநர் லிஜோ ஜோஸ் இயக்கி இருக்கிறார். இதில் மோகன்லாலுடன் சோனாலி குல்கர்ணி, மணிகண்டன் ஆர் ஆச்சாரி, ஹரிஷ் பேரழி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த 25ம் தேதி உலகம் முழுவதும் வௌியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வரும் பிப்ரவரி 23-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

MUST READ