Homeசெய்திகள்சினிமாமோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன்... ட்ரைலர் வெளியீடு...

மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன்… ட்ரைலர் வெளியீடு…

-

மோகன்லால் நடிப்பில் உருவாகியிருக்கும் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது.

மலையாளத்தில் லால்லேட்டனாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் மோகன்லால். மலையாளத்தில் முடிசூட மன்னனாக வலம் வரும் மோகன்லால் 80-களில் தொடங்கி இன்று வரை நூற்றுக்கணக்கில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அன்று முதல் இன்று வரை அனைவராலும் விரும்பப்படும் கதைகளில் ஹீரோவாகா நடித்து வருகிறார். தமிழில் மோகன்லால் இறுதியாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். ரஜினியுடன் இணைந்து அவர் நடித்திருப்பார். அப்படம் வரவேற்பையும் பெற்றது.

இதைத் தொடர்ந்து நெரு திரைப்படம் மோகன்லால் நடிப்பில் இறுதியாக வெளியானது. இப்படம் சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து பிருத்விராஜ் இயக்கத்தில் லூசிபர் இரண்டாம் பாகத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துபாய், லண்டன், கேரளா என அடுத்தடுத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மலைக்கோட்டை வாலிபன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை மலையாளத்தில் வெளியான ஜல்லிக்கட்டு, சுருளி, அங்கமாலி டைரிஸ் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த லிஜோ ஜோஸ் பெலிசெரி இயக்குகிறார். இதில் மோகன்லாலுடன் இணைந்து சோனாலி குல்கர்ணி, மணிகண்டன் ஆர் ஆச்சாரி, ஹரிஷ் பேரழி மற்றும் பலர் நடிக்கின்றனர். ஜான் அண்ட் மேரி கிரியேட்டிவ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. பிரசாந்த் பிள்ளை இதற்கு இசை அமைக்கிறார்.

இந்நிலையில், மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. மேலும், இத்திரைப்படம் வரும் ஜனவரி 25-ம் தேதி வெளியாக உள்ளது.

MUST READ