Homeசெய்திகள்சினிமாஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஜூட் ஆந்தனி ஜோசப் இயக்கிய 2018!

ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஜூட் ஆந்தனி ஜோசப் இயக்கிய 2018!

-

ஜூட் ஆந்தனி ஜோசப் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பாக வெளியான திரைப்படம் தான் 2018. இந்த படத்தில் டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருடன் இணைந்து குஞ்சாகோ போபன் , நரேன், லால், அபர்ணா பாலமுரளி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மலையாள மொழியில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வகையில் மலையாள சினிமாவிலேயே 2018 திரைப்படம் தான் குறுகிய நாட்களில் அதிக வசூலை வாரிக்குவித்தது. திரையரங்குகளில் மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் வசூலை வாரி குவித்த 2018 திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் பெய்த பெரும் மழையால் மக்கள் அனுபவித்த துயரங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படம் கேரளா மட்டும் இல்லாமல் தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ