spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசின்னப் பசங்க கூட பாட்டு படி டான்ஸ் ஆடி மஜா பண்ண ஏஆர் ரஹ்மான்!

சின்னப் பசங்க கூட பாட்டு படி டான்ஸ் ஆடி மஜா பண்ண ஏஆர் ரஹ்மான்!

-

- Advertisement -

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், பகத் ஃபாசில், வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

we-r-hiring

சமீபத்தில் வெளியான, வடிவேலு குரலில் பாடப்பட்ட இந்தப் படத்தின் ‘ராசா கண்ணு‘ என்னும் மனதை உருக்கும் பாடல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது.

இதைத்தொடர்ந்து இன்று இந்த படத்தின் 2வது பாடலான ‘ஜிகு ஜிகு ரயில்’ பாடல் வெளியாகி இருக்கிறது. ஏ ஆர் ரகுமானின் குரலில் பாடப்பட்டுள்ள இந்த பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்தப் பாடலில் ஏஆர் ரஹ்மான் செம ஜாலியாக சிறுவர்கள் உடன் நடனம் ஆடியுள்ளார். தன் இசை மூலம் ரசிகர்களை கட்டிப் போட்டி வைத்திருக்கும் ரகுமான் தற்போது டான்ஸ் மூலமும் கவர்ந்துள்ளார். இந்தப் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மாமன்னன் திரைப்படம் வரும் ஜூன் 29-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1-ம் தேதி சென்னையில் நடக்க இருப்பதாகவும் அதில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

MUST READ