Homeசெய்திகள்சினிமாஅதர்வா நடிக்கும் புதிய படம்... இணையும் மலையாள பிரபலம்...

அதர்வா நடிக்கும் புதிய படம்… இணையும் மலையாள பிரபலம்…

-

- Advertisement -
அறிமுக இயக்குநர் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் புதிய திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகை இணைவதாக தகவல் வௌியாகி உள்ளது.
90-களில் திரையுலகை தன் நடிப்பால் கலக்கிய டாப் நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா. தமிழ் திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருகிறார். பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான அதர்வா, முதல் படத்திலேயே தன் அசத்தலான நடிப்பால் முத்திரை பதித்தார். முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.இவரது தம்பி ஆகாஷ் முரளியும் விரைவில் கோலிவுட் திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.

தொடக்கத்தில் காதல் கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்த அதர்வா, அடுத்தடுத்து கமர்ஷியல் மற்றும் ஆக்‌ஷன் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இறுதியாக அவரது நடிப்பில் மத்தகம் என்ற இணைய தொடர் வெளியானது. தற்போது அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் டி.என்.ஏ. இத்திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடித்திருந்தார். இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வௌியாக உள்ளது.

இந்நிலையில், லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அதர்வா ஒப்பந்தமாகி இருக்கிறார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர், ஆகாஷ் பாஸ்கரன் இயக்க உள்ளார். இத்திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக இன்ஸ்டா பிரபலம் நிஹாரிகா நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது பிரபல மலையாள நடிகை மமிதா பைஜூவும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமன்றி பிரபல இசை அமைப்பாளர் தமன், இத்திரைப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இவர் இறுதியாக பாய்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ