- Advertisement -
மம்மூட்டி நடிப்பில் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் டர்போ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
மம்மூட்டி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் கன்னூர் ஸ்குவாட். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மலையாளம் மட்டுமன்றி தமிழிலும் இத்திரைப்படம் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, மம்மூட்டி நடிப்பில் இறுதியாக வௌியான திரைப்படம் பிரம்மயுகம். ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றோடு வசூலையும் வாரிக்குவித்தது. சதாவிசம் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். அர்ஜூன் அசோகன், சித்தார்த், பரதன், அமல்டா லிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
