spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகயல் ஆனந்தி நடிப்பில் மங்கை... முதல் பாடல் ரிலீஸ்....

கயல் ஆனந்தி நடிப்பில் மங்கை… முதல் பாடல் ரிலீஸ்….

-

- Advertisement -
கயல் ஆனந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் மங்கை படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆனந்தி. இவருக்கு கயல் ஆனந்தி என்ற பெயரும் உண்டு. தெலுங்கில் பஸ் ஸ்டார் என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு அவர் அறிமுகமாகினார். இதையடுத்து, பொறியாளன் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் ஆனந்தி. அப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹரிஸ் கல்யாண் நடித்திருப்பார். இதைத் தொடர்ந்து அவர் நடித்த கயல் படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, கயல் ஆனந்தி என பெயர் மாற்றம் பெற்றார்.

we-r-hiring
இதைத் தொடர்ந்து, விசாரணை, சண்டிவீரன், திரிஷா இல்லனா நயன்தாரா, பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இதில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் நல்ல விமர்சனத்தைப் பெற்று தந்தது. இறுதியாக அவரது நடிப்பில் கமலி ப்ரம் நடுக்காவேரி, ராவணக்கோட்டம் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதனிடையே, உதவி இயக்குநர் சாக்ரடீஸை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது மீண்டும் அடுத்தடுத்து நடித்து வரும் ஆனந்தி, ஒயிட் ரோஸ், மங்கை ஆகிய படங்களில் நடித்துள்ளார். குபேந்திரன் காமாட்சி என்பவர் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இதில் ஆனந்தியுடன் ஆதித்யா கதிர், கவிதா பாரதி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில், தற்போது ஏலம்மா எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியாகி இருக்கிறது.

MUST READ