spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமணிகண்டன் நடிப்பில் மீண்டும் ஒரு வெற்றிக்கதை... லவ்வர் படத்திற்கு ரசிகர்கள் கருத்து...

மணிகண்டன் நடிப்பில் மீண்டும் ஒரு வெற்றிக்கதை… லவ்வர் படத்திற்கு ரசிகர்கள் கருத்து…

-

- Advertisement -
சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் முகம் தெரியாமல் பல ஆண்டுகள் முயற்சித்துக் கொண்டிருந்த நடிகர் தான் இன்று கோலிவுட்டின் வளர்ந்து வரும் இளம் நடிகரான மணிகண்டன். சின்னத்திரையிலிருந்து வௌ்ளித்திரைக்கு வந்த மணிகண்டனுக்கு எடுத்ததும் பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. காலா படத்திற்கு பிறகுதான் மணிகண்டனின் திரைவாழ்வு ஏறுமுகமாக அமைந்தது. ராஜாகண்ணுவாக அவர் நடித்த ஜெய் பீம் திரைப்படம் மணிகண்டனை கோலிவுட்டின் அடையாளங்களில் ஒன்றாக மாற்றியது. இப்படத்தைத் தொடர்ந்து அவர் குட் நைட் திரைப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு லவ்வர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீ கௌரி பிரியா நாயகியாக நடித்துள்ளார். கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் படத்திற்கு இசை அமைத்துள்ளார். திரைப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

குட் நைட் படத்தைத் தொடர்ந்து மணிகண்டனின் நடிப்பில் வெளியான மற்றொரு வெற்றிக்கதை லவ்வர் என்று ரசிகர்கள் புகழாம் சூட்டியிருக்கின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் காதல் எனும் பெயரில், ஒருவரை ஒருவர் அடக்கி தங்களின் ஆதிக்கத்தை செலுத்துவதை அழகாக இயக்குநர் காட்டியிருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
we-r-hiring

காதலி கௌரி பிரியாவை, காதலன் மணிகண்டன் காதல் என்ற பெயரில் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பதும், இதனால் வரும் விளைவுகளுமாக படத்தின் கதை அமைந்துள்ளது. பொசசிவ்னஸ், ஆளுமை இந்த காரணங்களால் காதலர்களுக்கும் வரும் சிறு சிறு பிரச்சனைகளையும், நிகழ்காலத்திற்கு ஏற்றவாறு காட்சிப்படுத்தி இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

மணிகண்டனை திரையில் பார்த்தேலே டாக்ஸிக் லவ்வர் என்ற எண்ணம் மனதில் வரும் அளவிற்கு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி இருக்கின்றனர். அதே சமயம் நடிகை கௌரி பிரியாவின் நடிப்பும் பெரிதளவில் பேசப்படுகிறது. திரைக்கதையை பொருத்தவரை, காட்சிகள் நகர்வதில் விறுவிறுப்பு காட்டியிருக்கலாம் என்பது ரசிகர்களின் விமர்சனம்.

MUST READ