ஜெய் பீம் மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
மணிகண்டன் ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமானவர். அதன் பின் இவர் ஹீரோவாக நடித்த குட் நைட் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்குகிறார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் எம்ஆர்பி என்டர்டைன்மென்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இதற்கு இசையமைக்கிறார். இந்த புதிய படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து கௌரி பிரியா ரெட்டி, கண்ணன் ரவி மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டது.
The war has just begun.#LoveIsWar, isn’t it ?
Calling it the First Schedule wrap.
Directed by @Vyaaaas
A @RSeanRoldan musical !! pic.twitter.com/0nmmtNu0G0— Manikandan Kabali (@Manikabali87) August 24, 2023

அதைத்தொடர்ந்து இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக நடிகர் மணிகண்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது.
மணிகண்டன் சமீபத்தில் வெளியான மத்தகம் வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
