குட் நைட் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு டிஜே ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் எனும் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் ராசாகண்ணு கதாபாத்திரத்தில் நடித்திருந்த மணிகண்டன் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இதை தொடர்ந்து மணிகண்டன் அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கியுள்ள ‘குட் நைட்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் மீதா ரகுநாத் மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் இவர்களுடன் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், பக்ஸ், ஜெகன் கிருஷ்ணன், ரேச்சல் ஜெபேகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்மென்ட் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.
ஒரு மனிதனுக்கு ஏற்படும் குறட்டை பிரச்சனையால் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை பின்னணியாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 12ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
எந்தவித ஆரவாரமும் இல்லாமல் வெளியிடப்பட்ட ஏற்கனவே ஜூன் 2வது வாரத்தில் ஓ டி டி யில் வெளியாகும் என்று கூறப்பட்டது.
தற்போது இந்தத் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் என்ற ஓடிடி தளத்தில் வருகின்ற ஜூலை 3ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


