- Advertisement -
நடிகர் சங்கம் செய்தது மிகப்பெரிய தவறு என்றும், நான்கு மணி நேரத்திற்குள் அவர்கள் கொடுத்த அறிக்கையை திரும்பப் பெற்று மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என்றும் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான், சமீபத்தில் திரிஷா குறித்தும் மற்ற நடிகைகள் குறித்தும் கேவலமாக பேசியிருந்தார். இதற்கு த்ரிஷா, ரோஜா, குஷ்பூ, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் அலட்சியமாக பதில் அளித்திருந்தார்.
