- Advertisement -
இன்றைய ஓடிடி கார்னர் பக்கத்தில் இரு நட்சத்திரங்களின் இரு வேறு திரைப்படங்கள் வெளியாகியின்றன.

மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மார்கழி திங்கள். மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள இந்த படத்தில் பாரதிராஜா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அறிமுக நடிகர்களான சாம் செல்வன் மற்றும் ரக்ஷனா இருவரும் பாரதிராஜா உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் சுசீந்திரன் இதில் வில்லனாக நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் இயக்குனர் சுசீந்திரன் தான் இப்படத்தை வெண்ணிலா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருக்கிறார். இத்திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இத்திரைப்படம் டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.



