மார்கழி திங்கள் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
மனோஜ் பாரதிராஜா இயக்கியுள்ள திரைப்படம் தான் மார்கழி திங்கள். தன் தந்தை பாரதிராஜாவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து இந்த படத்தை மனோஜ் பாரதிராஜா இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில்அறிமுக நடிகர்களான சாம் செல்வன் மற்றும் ரக்ஷனா இருவரும் பாரதிராஜா உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இதனை இயக்குனர் சுசீந்திரன் வெண்ணிலா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சுசீந்திரன் இதில் வில்லனாகவும் நடித்துள்ளார். இளையராஜா இதற்கு இசை அமைத்துள்ளார். சாம் செல்வனுக்கும் ரக்ஷனாவிற்கும் பள்ளி பருவத்தில் ஏற்படும் காதலை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் இந்த செப்டம்பர் மாதத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் மார்கழி திங்கள் படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.